
சமைக்க தேவையானவை
- ரவை -1/4 கப்
- சேமியா – 2 கப்
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- கறிவேப்பிலை – 1 கொத்து
- பச்சை மிளகாய் – 3
- பெருங்காயம் -ஒரு சிட்டிகை
- ஒன்றிரண்டாக உடைத்த மிளகு
- சீரகம் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு, உளுத்தம் பருப்பு – 1டீஸ்பூன்
- உடைத்த முந்திரி – 10 துண்டுகள்
- நெய் – 3 டீஸ்பூன்
- தயிர்-1 கப்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கடாயில் நெய்யை விட்டு சூடாக்கவும். அதில் முதலில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். பிறகு ரவையைப் போட்டு வறுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும்.
மீதமிருக்கும் நெய்யில் முந்திரியை வறுத்து, அதே பாத்திரத்தில் கொட்டவும். பிறகு அதே கடாயில், பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் பொடியாக அரிந்து போட்டு மற்ற தாளிக்கும் பொருட்களை தாளித்து தயிர், உப்பு சேர்த்து சேமியா கலவை போட்டிருக்கும் பாத்திரத்தில் போட்டு அனைத்தையும் நன்கு கலக்கவும்.
இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து இட்லிகளாக வார்த்து எடுக்கவும். இப்போது சுவையான சோர் சேமியா இட்லி ரெடி.!!!
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1