அல்வாஇனிப்புஸ்வீட்

ராகி அல்வா

Rocky Alva

சமைக்க தேவையானவை


  • ராகி மாவு – 1/2 கப்
  • நெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • சூடான பால் – 1 கப்
  • சர்க்கரை – 1/4 கப்
  • ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
  • பாதாம் – 6-7 (பொடியாக நறுக்கியது)
  • பிஸ்தா – 6- (பொடியாக நறுக்கியது)


செய்முறை


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், அதில் 1/2 கப் ராகி மாவை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் கெட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும். பின் அதில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை உருக கிளறி விடவும். பிறகு அதில் 1 கப் நன்கு சூடான பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

பால் சேர்த்த பின் கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும். எப்போது வாணலியில் ஒட்டாத பதத்தில் கலவை வருகிறதோ, அப்போது 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து அலங்கரித்தால், சுவையான ராகி அல்வா ரெடி.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button