சைவம்தோசை

ராகி சேமியா அடை

Rocky Samiya Adai

சமைக்க தேவையானவை


  • ராகி சேமியா – 100 கிராம்,
  • நறுக்கிய கேரட்
  • கோஸ் – 1/2 கப்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • பச்சரிசி – 100 கிராம்
  • துவரம்பருப்பு -50 கிராம்
  • கடலைப்பருப்பு – 50 கிராம்
  • காய்ந்த மிளகாய் – 8


செய்முறை


முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ராகி சேமியா, உப்பு, எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு 2 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து உதிரவைக்கவும். பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில் ராகி சேமியா, பெருங்காயத்தூள், காய்கறிகள், சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். கலந்த கலவையை அடை பதத்திற்குத் தட்டி கல் சூடான பிறகு போடவும். அதைச் சுற்றி எண்ணெய் விட்டு இரு பக்கமும் நன்றாக வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து ராகி சேமியா அடையைச் சூடாகப் பரிமாறி மகிழுங்கள். இதற்கு வெங்காய சட்னி வைத்துச் சாப்பிட்டால் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button