
சமைக்க தேவையானவை
- ராகி மாவு – 1 கப்
- சாம்பார் வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
- வரமிளகாய் – 5
- பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – சுவைகேற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம், பொடியாக நறுக்கிய வரமிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் சிறிது நீர் ஊற்றி, உதிரி உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை, எண்ணெயில் உதிர்த்து விட்டு, பொரித்து எடுத்தால், சுவையான ராகி பக்கோடா ரெடி.
குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் ராகி பக்கோடா மாவுடன் சிறிது பொட்டுக்கடலையும் சேர்த்துக் கொள்ளலாம். அதேப் போல் கொத்தமல்லியையும் ராகி பக்கோடா தயாரிக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். இது இன்னும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1