இனிப்புஸ்வீட்

லட்டு

Laddu

சமைக்க தேவையானவை


  • கடலை மாவு – 1 கப்
  • சர்க்கரை பொடி – 1/2 கப்
  • நெய் – 1/4 கப் 3 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி – 1 கையளவு
  • ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்


செய்முறை


முதலில் கடலை மாவை சல்லடையில் சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் 1/4 கப் நெய் ஊற்றி சூடேற்றி, பின் அதில் சலித்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து, 6-7 நிமிடம் நன்கு கிளற வேண்டும்.

பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்து, அதில் சர்க்கரை பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து, மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நன்கு கிளறி, மற்றொரு பௌலில் மாற்ற வேண்டும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button