
சமைக்க தேவையானவை
- பன்னீர் – 200 கிராம்
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- பிரியாணி இலை – 1
- பட்டை – 1
- சீரகம் – 1 டீஸ்பூன்
- தக்காளி – 2 (பெரியது மற்றும் அரைத்துக் கொள்ளவும்)
- இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- கொத்தமல்லி – சிறிது
செய்முறை
முதலில் பன்னீரை எடுத்து, சோள மாவில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் காஷ்மீரி மிளகாயை தூளை நீர் சேர்த்து ஓரளவு விழுதாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும். பின் இஞ்சி விழுதை சேர்த்து கிளறி, அரைத்த தக்காளியை ஊற்றி பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், லால் பன்னீர் தயார்.
குறிப்பு: பன்னீரை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அந்த வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். கரம் மசாலா பவுடரை சேர்ப்பது, நல்ல ப்ளேவரைத் தரும். வேண்டுமானால் இஞ்சி விழுதிற்கு பதிலாக இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் தக்காளியை சேர்ப்பதற்கு முன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.