
சமைக்க தேவையானவை
- வரகு சேமியா – 100 கிராம்,
- வெல்லம் – 100 கிராம்,
- சோள மாவு – 2 டீஸ்பூன்,
- நெய் – 50 கிராம்,
- ஏலப்பொடி – 1/4 டீஸ்பூன்,
- பால் – 1/2 லிட்டர்,
- டூட்டி ஃப்ரூட்டி – 2 டீஸ்பூன்,
- வெள்ளரி விதை – 1/2 டீஸ்பூன்,
- மஞ்சள் கேசரி கலர் – 1 சிட்டிகை
செய்முறை
கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் வரகு சேமியாவை பிரட்டி, பால் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் வெல்லம் சேர்த்து கிண்டவும். சோள மாவு, மஞ்சள் கலரை சிறிது நீரில் கரைத்து விட அல்வா இறுகும். மேலும் நெய் விட்டு கிண்டி விடவும். இதனுடன் ஏலப்பொடி தூவி இறக்கவும். வெள்ளரி விதை மற்றும் டூட்டி ஃப்ரூட்டியால் அலங்கரித்துப் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1