
சமைக்க தேவையானவை
- கடலை பருப்பு – 1 1/4 கப்
- வால்நட்ஸ் – 3/4 கப்
- சோம்பு – 1 1/2 தேக்கரண்டி
- உப்பு – 1 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி – 1 துண்டு
- கறிவேப்பில்லை – சிறிதகளவு
- கொத்தமல்லி இலை – சிறிதகளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலை பருப்பை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். சிறிதளவு வால்நட்ஸ், கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைக்கவும். நன்றாக ஊறிய கடலை பருப்புடன், வால்நட்ஸ், சோம்பு, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
அரைத்த கடலை பருப்பு கலவையுடன், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி இலை, ஊறவைத்த கடலை பருப்பு, நறுக்கிய வால்நட்ஸ் சேர்த்து நன்கு பிசையவும். கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிதளவு எடுத்து, தட்டி, எண்ணெயில் போட்டு பொரிக்கவும். பொன்னிறமானதும், வடையை எடுக்கவும்.
சுவையான வால்நட்ஸ் மசாலா வடை தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1