கூட்டு/பொறியல்சைடீஸ்

வாழைக்காய் பொடிமாஸ்

Banana Podimas

சமைக்க தேவையானவை


  • வாழைக்காய் – 2
  • வெங்காயம் -1.
  • இஞ்சி – 1 அங்குலம்
  • தேங்காய் துருவ – 1 மேஜைக்கரண்டி
  • கறிவேப்பிலை – 5
  • பச்சைமிளகாய் – 1
  • மிளகுத்தூள் – 1/4 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தாளிக்க:
  • எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி,
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் – 1/4 தேக்கரண்டி


செய்முறை


வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாழைக்காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து (தோல் நிறம் கருப்பாக மாறிவிடும்) எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த வாழைக்காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும். மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்றுசேர்ந்து வேகவிடவும்.

தண்ணீர் சேர்க்கவேண்டாம். இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும். தயிர் அல்லது ரசம் சாதத்துடன் வாழைக்காய் பொடிமாஸ் அசத்தல்

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button