சூப்சைவ சூப்

15 நிமிடத்தில் வாழைத்தண்டு சூப்

Banana stem soup


செய்முறை


நம்முடைய உணவில் இந்த வாழைத்தண்டை வாரத்தில் ஒரு நாளாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரக பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தரும் சக்தி இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. குறிப்பாக வரக்கூடிய வெயில் காலத்தில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட இந்த வாழை தண்டை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் மாலை நேரத்தில் டீ காபிக்கு பதிலாக இப்படி ஒரு சூப் வைத்துக் கொடுங்கள். சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாழைத்தண்டை வெட்டி வைத்துக் கொண்டால், அடுத்த 15 நிமிடத்தில் சூப் தயார். நேரத்தைக் கடத்தாமல் ரெசிப்பிக்குள் செல்வோம்.

முதலில் மீடியம் சைஸில் இருக்கும் வாழைத்தண்டுக்கு மேலே இருக்கும் நார்களை நீக்கி விட்டு எப்போதும் போல, பொரியலுக்கு வெட்டுவது போல சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழைத்தண்டு கருக்காமல் இருக்கும்.

அடுத்தபடியாக வெட்டிய இந்த வாழை தண்டுகளை தண்ணீரிலிருந்து எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு குக்கரில் போட்டு கொள்ளுங்கள். வாழைத்தண்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், சேர்த்து குக்கரை மூடி 2 லிருந்து 3 விசில் வைக்க வேண்டும். வாழைத்தண்டுகள் நன்றாக வெந்திருக்கும். குக்கரில் இந்த வாழைத்தண்டு அப்படியே இருக்கட்டும். அடுத்தபடியாக சூப்பை தாளித்து விடலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மீடியம் சைஸில் இருக்கும் – 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டுக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக பச்சை மிளகாய் – 1 மட்டும் போட்டு, வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக வெங்காயத்தை மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வேகவைத்து குக்கரில் இருக்கும் வாழைத் தண்டை அப்படியே தண்ணீரோடு இந்த கடாயில் ஊற்றி விடுங்கள்.

வாழைத்தண்டை வேக வைத்திருக்கும் தண்ணீர் மட்டும் போதாது. அதன் பின்பு மீண்டும் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு 3 நிமிடங்கள் வரை இந்த வாழைத் தண்டு சூப்பை கொதிக்கவிடுங்கள்.

இந்த சூப் கொதித்து வருவதற்குள் ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் – அளவு கான்பிளவர் மாவு போட்டு, 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து இந்த கரைசலை சூப்பில் ஊற்றி மீண்டும் 2 நிமிடம் கொதிக்க வைக்கவேண்டும். இறுதியாக 1 – டேபிள்ஸ்பூன் மிளகுத் தூளை தூவி கலந்து விட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை தூவி கொள்ளலாம்.

அவ்வளவு தான். சூப்பரான வாழைத்தண்டு சூப் தயார். இதை சிறிய சிறிய பௌலில் ஊற்றி ஒரு ஸ்பூன் போட்டு பரிமாறுங்கள். இதன் மேலே மொறுமொறுப்பாக இருப்பதற்கு மிக்சர், கான்பிளவர் சிப்ஸ் எதை வேண்டும் என்றாலும் தூவி குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை குடித்து பாருங்கள்.

சுடச்சுட சாப்பிடும்போது இந்த சூப் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். வாழைத்தண்டன் சேர்த்து சூப்பை குடிக்க வேண்டும். சொல்லவே வேண்டாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபி இது. மிஸ் பண்ணாம எல்லோர் வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button