
சமைக்க தேவையானவை
- வாழைத்தண்டு-1 கப்
- தனியா-3 ஸ்பூன்
- சீரகம்-3 ஸ்பூன்
- மிளகு-3 ஸ்பூன்
- வெங்காயம்-2
- தக்காளி-1
- கொத்தமல்லி-சிறிது
- கறிவேப்பிலை-சிறிது
- இஞ்சி-சிறிது
- பூண்டு-2 பல்
- எண்ணெய்-தேவையான அளவு
- மஞ்சள் தூள்-2 ஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
- மிளகு தூள்-2 ஸ்பூன்
செய்முறை
முதலில் வாழைத்தண்டைச் சிறு சிறு தூண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் வாழைத்தண்டைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.ஒரு வாணலியில் தனியா, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
மிக்சியில் வறுத்த கலவையை அரைத்துக் கொள்ள வேண்டும்.அதே வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அரைத்த கலவையைச் சேர்த்து நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கொதிக்க வைத்த வாழைத்தண்டு, மஞ்சள்தூள், தேவையான அளவு சேர்த்து ஒரு 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழிந்த பிறகு கடைசியில் கொத்தமல்லி தூவினால் சூடான, சுவையான, ஆரோக்கியமான, வாழைத்தண்டு சூப் தயார்.. தேவைப்பட்டால் சுவைக்கு மிளகு தூள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.