
சமைக்க தேவையானவை
- வாழைப்பூ – 1
- சின்ன வெங்காயம் – 6
- தேங்காய் பால் – 1 கப்
- மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
- புளி – சிறிய உருண்டை
- சீரகம் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைப்பூவின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். பின்னர் புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம் போட்டு வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
கொதித்த பின் வேக வைத்த வாழைப்பூ மற்றும் தேங்காய் பால் கலந்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும். சூடான ஆரோக்கியமான வாழைப்பூ குழம்பு தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1