திண்பண்டங்கள்வடை

வாழைப்பூ வடை

Vāḻaippū vaṭai

சமைக்க தேவையானவை


  • கடலைப்பருப்பு – 100 கிராம்
  • துவரம் பருப்பு – 50 கிராம்
  • சின்ன வெங்காயம் – தேவைக்கு
  • எண்ணெய் – தேவைக்கு
  • சோம்பு – சிறிது
  • மிளகாய் வத்தல் – 2
  • வாழைப்பூ – தேவைக்கு
  • உப்பு – தேவைக்கு
  • மஞ்சள் தூள் – சிறிது


செய்முறை


முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். வாழைப்பூவை நரம்பு எடுத்துத் தனியாக அரைக்கவும். இப்போது நன்கு ஊறிய பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், உப்பு இவற்றைச் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த வாழைப் பூவையும், வெங்காய த்தையும் இதனுடன் சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். இப்போது வாழைப்பூ வடை தயார். சிறுநீரகத்தில் கோளாறு இருப்பவர்கள் இதனைச் சாப்பிடலாம். மாலை நேரத்தில் குடிக்கும் தேநீரோடு இதனைச் சேர்த்து சாப்பிடுவதும் தனிச் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button