
சமைக்க தேவையானவை
- விரால் மீன் – அரை கிலோ
- தனியா – 6 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்)
- பூண்டு – 10 பல்
- சோம்பு – 1 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்)
- சின்ன வெங்காயம் – 15
- நாட்டுத் தக்காளி – 3
- காய்ந்த மிளகாய் – 15 (வறுத்து அரைக்கவும்)
- தேங்காய் எண்ணெய் , உப்பு – தேவையான அளவு
- புளி – 50 கிராம்
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்பு புளியை கரைத்து அதில் அரைத்த மிளகாய் விழுதை கலந்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். பின்னர் மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வதக்கிய தக்காளி, வெங்காயத்துடன், புளி கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு மீனை போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூடி விடவும்.பின்பு பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1