
சமைக்க தேவையானவை
- மைதா – அரைக் கிலோ
- எண்ணெய் – தேவையான அளவு
- ஆப்பசோடா – 2 சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, 2 குழிக்கரண்டி எண்ணெய், ஆப்ப சோடா போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் ஊற விடவும் உருண்டைகளை இரண்டு மணி நேரம் வைத்து இருக்கவும்.
கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவை எடுத்து பலகையில் வைத்து விசுறவும்.விசிறிய மாவை சுற்றி வைக்கவும். எல்லா உருண்டைகளையும் அதே மாதிரி செய்யவும்.
சுற்றிய மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து ஒரு அழுத்து அழுத்தவும். பின் அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் தவாவை போட்டு எண்ணெய் ஊற்றி அதில் விசிறி வைத்த பரோட்டாவைப் போட்டு இருபக்கமும் திருப்பி போட்டு சுடவும் (பரோட்டாவை தட்ட கூடாது)சுவையான விருதுநகர் ஆயில் பரோட்டா ரெடி. இதுக்கு சிக்கன் சால்னா, மட்டன் சால்னா சூப்பர் காம்பினேஷன்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1