அசைவம்இறால்

வெங்காய இறால்

Onion prawn

சமைக்க தேவையானவை


இறால் – கால் கிலோ
வெங்காயம் – கால் கிலோ
எண்ணெய் – சாதாரண எண்ணெய் (அ) ஆலிவ் – ஐந்து தேக்கரண்டி
தக்காளி – இரண்டு
பட்டை – ஒன்று
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
பச்சைமிளகாய் – இரண்டு


செய்முறை


இறாலை முதுகிலும், வயிற்றிலும் உள்ள அழுக்கெடுத்து சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

பெரிய வாயகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டையை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு தீயை சிம்மில் வைத்து கருகாமல் நன்கு வேகவிடவும்.

வெங்காயம் நன்கு சிவக்காமல் வதங்க வேண்டும்.வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சைவாடை போகிறவரை கிளறி கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாயை சேர்க்கவும். .

பிறகு இறாலை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தக்காளியையும் சேர்த்து கிளறி சிம்மில் விடவும். அப்படியே கூட்டு மாதிரி வரும். இதற்கு எண்ணெய் அதிகமாக ஊற்றினால் தான் நல்லா இருக்கும்.

வீடியோ இணைப்பு

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button