
சமைக்க தேவையானவை
-
- பாசிப் பருப்பு -3/4 கப்
- அரிசி -1/4 கப்
- தக்காளி -1
- கேரட் -1 கப்
- முட்டைக்கோசு -1 கப்
- பட்டாணி -1 கப்
- குடை மிளகாய் -1/2 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் -1
- நெய் -1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை -சிறிதளவு
- உப்பு -தேவையான அளவு
- மிளகாய் பொடி -தேவையான அளவு
- மஞ்சள் -1/2 ஸ்பூன்
- பெருங்காயம் -தேவையான அளவு
- சீரகம் -1 ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பாசிப் பருப்பை வறுத்து கொள்ளவும். பிறகு அலசிய அரிசியை பருப்பில் சேர்த்து தண்ணீர், மஞ்சள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 6 முதல் 7 விசில் வரும் வரை குக்கரை மூடி வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை வைத்து அதில் நெய், பெருங்காயம், சீரகம், பட்டாணி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய குடை மிளகாய் மற்றும் சேர்க்க வேண்டிய அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.
காரத்திற்கு நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு காய்கறி கலவையை பருப்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கடைசியில் நெய் ஊற்றினால் சுவையான கிச்சடி தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1