சைவம்பூரி

வெஜிடபிள் பூரி

vegetable poori

சமைக்க தேவையானவை


கோதுமை மாவு – 2 கப்
கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் (மூன்றும் பொடியாக நறுக்கியது) – அரை கப்
இஞ்சி,பச்சை மிளகாய் விழுது – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கரம் மசாலாதூள் – கால் டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் அல்லது நெய் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு – கால் டீஸ்பூன்.


செய்முறை


கோதுமை மாவை உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்துவைத்துக் கொள்ளவும்.

காய்கறிகளை லேசாகத் தண்ணீர் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். அத்துடன் இஞ்சி&பச்சை மிளகாய் விழுது, மல்லித்தழை, கரம் மசாலாதூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து, கெட்டியாகக் கிளறி வைத்துக்கொள்ளவும்.

மாவை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி, நடுவே குழி போல செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காய்கறி பூரணத்தை வைத்து மூடி, பூரிகளாகத் தேய்க்கவும். காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button