
சமைக்க தேவையானவை
- இடியாப்பம் – 5
- பெரிய வெங்காயம் – 1
- கொத்தமல்லி (நறுக்கியது) – கைப்பிடி அளவு
- கேரட், குடமிளகாய் – தலா ஒன்று
- நெய் – 2 டீஸ்பூன்
- பீன்ஸ் – 10
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
பெரிய பீன்ஸ், கேரட், வெங்காயம், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, நறுக்கிய காய்களைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
இடியாப்பத்தை கொஞ்சம் வெந்நீரில் சேர்த்து, வடிகட்டி அதனுடன் வதக்கிய காய்களைப் போட்டுக் கிளறவும்.
நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். காய்கறி இடியாப்பம் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1