
சமைக்க தேவையானவை
- மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் – சிறிது
- தேங்காய் – அரைமூடி
- கடுகு – தேவையான அளவு
- வெண்டைக்காய் – கால் கிலோ
- வெங்காயம் – 2
- புளித்தண்ணீர் -கால் கப்
- உப்பு – தேவையான அளவு
- வெந்தயம் – தேவையான அளவு
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- பூண்டு – 5 பல்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெண்டைக்காயை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , நன்கு வதக்கி எடுக்கவும். பின் கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும். பிறகு நன்கு கொதித்ததும்அரைத்த தேங்காய் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.நன்கு சுண்டியதும் இறக்கிவிடவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1