கூட்டு/பொறியல்சைடீஸ்சைவம்

வெண்டைக்காய் முந்திரி பொரியல்

Veṇṭaikkāy muntiri poriyal

சமைக்க தேவையானவை


  • வெண்டைக்காய் – 1/2 கிலோ
  • பூண்டு – 4
  • முந்திரி – 8
  • துருவிய தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 1
  • எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்


செய்முறை


முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, துணியால் துடைத்துவிட்டு, பின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் முந்திரியைப் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை வதக்கியதும், வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெண்டைக்காய் நன்கு சுருங்கி வேகும் வரை வதக்கவும். வெண்டைக்காய் நன்கு வெந்ததும், இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் முந்திரி பொரியல் தயார்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button