
சமைக்க தேவையானவை
- வெந்தயக்கீரைப் – 1 கப்
- பச்சரிசி – 1 கப்
- பாசிப் பருப்பு – அரை கப்
- பெரிய வெங்காயம் – 1
- கேரட், தக்காளி – 1
- வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
- இஞ்சி – 1 துண்டு
- கறிவேப்பிலை சிறிது
- நெய் – 1 தேக்கரண்டி
- பெருங்காயம் – அரை தேக்கரண்டி
- உப்பு-தேவைக்கு ஏற்ப
- பட்டை, சீரகம்,மிளகு – 1 டீஸ்பூன்
- ஏலக்காய், லவங்கம் – 2
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை
முதலில் அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேருங்கள். பின்பு சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.அதன் பின் நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி வெந்தயக்கீரையைச் சேருங்கள்.
சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள் வெந்தயக்கீரைப் பொங்கல் ரெடி..
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1