குழம்பு

வெள்ளரிக்காய் குழம்பு

Cucumber Curry

சமைக்க தேவையானவை


  • நறுக்கிய வெள்ளரிக்காய் – ஒரு கப்
  • வேகவைத்த துவரம்பருப்பு
  • பாசிப்பருப்பு – தலா கால் கப்
  • சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க

  • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு

வறுத்து அரைக்க

  • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • மிளகு – ஒரு டீஸ்பூன்
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை


முதலில் கடாய் ஒன்று எடுத்து வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து வைக்கவும். ஆறியபின் ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவேண்டும்.

அதே கடாயில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வைக்க வேண்டும்.

பின் இதனுடன் தண்ணீர் ஊற்றி வெள்ளரிக்காய், உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து வேகவிட பின், வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கலந்து 5-6 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் வெள்ளரிக்காய் பொரித்த குழம்பு ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button