
சமைக்க தேவையானவை
- வேப்பம்பூ – தேவையான அளவு
- புளி – சிறிதளவு
- கடுகு – 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து கரைத்து வாய்த்த புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொத்தி வந்தவுடன் அதில் வறுத்த வேப்பம்பூ, செரிமானத்திற்கு பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடைசியில் சிறிதளவு கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கினால் வேப்பம்பூ ரசம் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1