சட்னிசைடீஸ்

வேர்க்கடலை சட்னி

Peanut Chutney

சமைக்க தேவையானவை


  • வேர்க்கடலை – 1/3 கப்
  • சின்ன வெங்காயம் – 14
  • வரமிளகாய் – 2
  • பூண்டு – 2 பற்கள்
  • புளி – சிறு துண்டு
  • உப்பு – தேவையான அளவு
  • தாளிப்பதற்கு
  • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை


செய்முறை


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, வரமிளகாய் மற்றும் புளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவை, வேர்க்கடலை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றி கலந்தால், வேர்க்கடலை சட்னி ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button