
சமைக்க தேவையானவை
- வறுத்த வேர்க்கடலை பருப்பு – 100 கிராம்
- தூளாக்கிய வெல்லம் – 200 கிராம்
- மைதா – 50 கிராம்
- எண்ணெய் – தேவைக்கு
- ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
- சோடா உப்பு – அரை டீஸ்பூன்
- கேசரி பவுடர் – அரை டீஸ்பூன்
செய்முறை
வெல்லத்தை நீரில் கலந்து பாகு காய்ச்சிக்கொள்ளவும்.வேர்க்கடலையை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். மைதா மாவுடன் சிறிதளவு வெந்நீர், சோடா உப்பு, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.
அதனுடன் அரைத்த வேர்க்கடலையையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவு கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அந்த உருண்டைகளை வெல்ல பாகுவில் ஊறவைத்து ருசிக்கலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1