காரம்திண்பண்டங்கள்

ஸ்வீட் கார்ன் பக்கோடா

Sweet corn baguette

சமைக்க தேவையானவை


  • ஸ்வீட் கார்ன் – 2 கப் (வேக வைத்தது)
  • வெங்காயம் – 1/2 (மெல்லியதாக நறுக்கியது)
  • கடலை மாவு – 1/2 கப்
  • அரிசி மாவு – 2 டேபிள் பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீபூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீபூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீபூன்
  • சாட் மசாலா – 1/4 டீபூன்
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
  • கறிவேப்பிலை – சிறிது
  • உப்பு – 1/4 டீபூன்
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை


முதலில் ஒரு பௌலில் வேக வைத்த கார்ன் மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ளலாம்.

பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பெங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பிசையும் போது, தண்ணீர் சேர்க்கக்கூடாது.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.எண்ணெய் நன்கு சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button