
சமைக்க தேவையானவை
- மட்டன் – 300 கிராம்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 கப்
- இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- புதினா – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- ஜாதிக்காய் – 1 பிஞ்சு
- மூங் டால் – 3 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- மைசூர் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
- கோதுமை – 1/2 கப்
- கோதுமை ரவை – 3/4 கப்
- நெய் – தேவையான அளவு
- பாதாம் – சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனுடன் நெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், மிளகு சேர்த்து அதனை வதக்கவும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தினை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது கலந்து கிளறவும்.
பிறகு அதில் சின்ன சின்ன துண்டுகளாக மட்டன் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் பச்சை மிளகாய், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு, புதினா, கொத்தமல்லி மற்றும் ஜாதிக்காய் சேர்த்து கிளறவும்.
நன்றாக வெந்ததும் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும். பிறகு மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பருப்பு வகைகள் மற்றும் அரிசியினை அதனுடன் சேர்க்கவும். பிறகு அரைத்த கோதுமை மற்றும் கோதுமை ரவை அதில் சேர்த்து மீண்டும் அதனை நன்றாக வேக விடவும்.
நன்றாக வெந்ததும் கரண்டி கொண்டு மசிய வைத்து அதன் மீது நெய் ஊற்றி நறுக்கிய பாதாம் போட்டு இறக்கினால் சுவையான ஹைதராபாத் மட்டன் ஹலீம் தயார்.