கீரை வகைகள்சைடீஸ்

கீரை தயிர் கறி

Keerai Thayir Kari Recipe

சமைக்க தேவையானவை


 • கீரை – ஒரு கட்டு
 • தயிர் – ஒரு கப்
 • கிராம்பு – 3
 • பூண்டு – 3 பல்
 • மிளகாய் வற்றல் – 3
 • கறிவேப்பிலை – 2 கொத்து
 • வெந்தயம் – சிறிது
 • வெங்காயம் – 2
 • பச்சை மிளகாய் – 3
 • இஞ்சி – சிறிது
 • தக்காளி – 2
 • மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
 • எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
 • கடுகு – 2 தேக்கரண்டி

விளக்கம்

நாம் செய்யும் சமையலில் விதவிதமான விரைட்டிகள் இருக்கின்றன, அவைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வதில்லை. பொதுவாக கீரைகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது. இயற்கை புரதங்கள் அதிகளவில் கிடைக்க கூடியது. மிகவும் எளிமையாகவும், மிக குறைவான எல்லோரும் வாங்கிக் கொள்ளும் விலையில் கிடைக்க கூடிய ஒன்று.

கீரை என்றாலே பொறியல், அவியல், வதக்கல் என்பதைத் தாண்டி வித்தியாசமாகவும், சுவையாகவும் பல வகைகளில் செய்யலாம். அதில் ஒன்றுதான் தயிர் கறி கீரை. சரி இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.


செய்முறை :


முதலில் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு, மிளகாய் வற்றல், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.

பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து சிவக்க வதக்கவும். அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வதங்கியதும் கீரையைச் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும். பிறகு அதனுடன் தயிர் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும். சுவையான கீரை தயிர் கறி தயார்.


கீரைகளின் பயன்கள்

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும்.

கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் பொதுவான உடல்நல அசெளகரியமாகும்.

கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது. கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.


உட்கொள்ளும் கீரைகளின் அளவு

 1. பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு
 2. ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு
 3. பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது)க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு
 4. 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
25
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button